Wednesday, May 9, 2012

http://www.youtube.com/watch?v=bZRqo-ODv70
தமிழுக்கு முதல் மரியாதை




அடுத்த திங்கள் தொடங்கப்போகும் ஒலிம்பிக் போட்டிக்கு இப்போதே தயாராகிவிட்டது இலண்டன் மாநகரம்.வரவேற்பின் ஒரு அம்சமாக, உலகிலிருந்து வரும் பார்வையாளர்களை வரவேற்க ஒரு ஒளிக்காட்சியை உருவாக்கியிருக்கிறார்கள். இலண்டனில் வாழும் அனைத்து சமூக மக்களும் தத்தமது மொழியில் முதலில் வணக்கம் என்று,பின்னர் வரவேற்கிறோம் என்றும் கூறுகிறார்கள். இதில் சிறப்பு அம்சம் என்ன தெரியுமா? இந்த ஒளிக்காட்சி தொடங்கும் போதே முதன்முதலாக வணக்கம் கூறுவது ஒரு தமிழ்ச் சிறுவன்தான். வணக்கம்என்று அழகு தமிழில் அவன் துள்ளிக் குதித்துச் சொல்லுகிறான். தொடர்ந்து பலரும் வணாங்கியபின்லண்டன் மாநகரம் உங்களை அன்புடன் வரவேற்கிறது என்று ஒரு தமிழர் கூறுகிறார். மெல்லிய பின்னணி இசையுடன் பாடல் லண்டனைச் சுற்றிப் படமாக்கப்பட்டிருக்கிறது

The good thing about music is whent it hits you youd dont feel any pain.....

Tuesday, May 8, 2012

 

மக்களை அழிக்க வந்த அக்னி.






அக்னி 5 ஏவுகணை மாபெரும் வெற்றி என இந்திய ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதை கேட்டு இந்தியாவில் பெரும்பாலானவர்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள். தந்போது உருவாக்கப்பட்டுள்ள அக்னி ஐந்து என்கிற ஏவுகனை 5 ஆயிரம் கி.மீ தாண்டிப்போய் குறிப்பிட்ட இடத்தை தாக்கும் திறன் கொண்டது, அதேபோல் கண்டம் விட்டு கண்டம் பாயும் வேகம் கொண்டது இந்த ஏவுகனை என்கிறார்கள்.



கண்டம் விட்டு கண்டம் போய் தாக்குதல் நடத்தும் இந்த ஏவுகனை நமக்கு உலகில் வல்லரசு என்ற பெயரை வேண்டுமானால் வாங்கி தரலாமே ஒழிய இந்திய ஒன்றியத்தில் உள்ள வறுமையை ஒழிக்காது.



எதிரி நாடுகளும், இந்தியாவை சீண்ட நினைக்கும் நாடுகள் வேண்டுமானால் இதனை கண்டு பயப்படலாம். மற்றப்படி இந்த ஏவுகனையால் மக்களுக்கு ஒன்றும் புரியோஜனம்மில்லை. ஆளும் வர்க்க அரசியல்வாதிகளுக்கும், இதன் விஞ்ஞானிகளுக்கும் வேண்டுமானால் பெரும் ‘லாபமா’ இது இருக்கும். காரணம், கணக்கு வழக்கில்லாத பணம் இந்த ஆய்வுக்காக ஒதுக்கப்படுகிறது. மக்கள் மன்றத்துக்கு செலவு கணக்குகள் வருவதேயில்லை. நாட்டின் பாதுகாப்பு சம்மந்தமானது என இதற்கு காரணம் கூறுகிறார்கள்.



பாதுகாப்பு சம்மந்தமானது என்றால் அக்னி ஏவுகனையில் பயன்படுத்தப்படும் டெக்னாலஜி பற்றிய விவரங்களை வெளியிடாமல் இருக்கலாம். செலவுகளை கூட வெளியிட மாட்டேன் என்பது எந்த விதத்தில் நியாயம். மக்களின் வரிப்பணம் தான் இதற்கு பயன்படுத்தப்படுகிறது. செயல்பாடோ சர்வாதிகாரமாக உள்ளது. இதற்கு பெயர் ஜனநாயக நாடாம். மக்களின் வரிப்பணத்தை பாதுகாப்பு என்ற பெயரில் கொள்ளையடிக்கிறார்கள்.



போர் வரும்போது மட்டும் தான் இந்த அக்னி ஏவுகனைகளை நாம் பயன்படுத்தப்போகிறோம். அதற்கு பலாயிரம் கோடிகள் செலவு செய்கிறார்கள். இது எந்த விதத்தில் நியாயம்.



இதுப்பற்றி கேள்வி கேட்டால் நாட்டின் பாதுகாப்பு மீது உங்களுக்கு அக்கறையில்லையா என எதிர்பாட்டு பாடுகிறார்கள். நாடு பாதுகாப்பாக இருந்தால் போதுமா மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டாமா?.



முருங்கை மரம் பறந்து விரிந்து இருக்கும். அதன் இலைகள், காய்கள் மக்கள் பயன்படுத்தலாம். அந்த மரத்தில் ஏறினாலோ, ஊஞ்சல் விளையாட நினைத்தாலோ ஆபத்து தான். அதேபோல் தான் அக்னி ஏவுகனை. அது இருக்கிறது என்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையில் அழகாக அதிகாரம் செலுத்தலாம், உலகில் ஜாம்பவானாக வலம் வரலாம். ஆனால் பிறர் சீண்டும் போதுதான் தெரியும் அக்னியெல்லாம் ‘அவுல்’ போல என்பது.



தினமும் கோடிக்கணக்கான மக்கள் ஒரு வேளை உணவு உண்டு உயிர் வாழும் தேசத்தில் அதற்கெல்லாம் முக்கியத்துவம் தராத மீடியாக்கள் அக்னிக்கு அதீத முக்கியத்துவம் தருகின்றன.



தேசம் பாதுகாப்பாக தான் இருக்கிறது. ஆனால் மக்கள் தான் இந்த நாட்டில் பாதுகாப்பாக இல்லை

Monday, May 7, 2012

 மக்கள் கஞ்சி! கஞ்சி! என்று கதறி மடியும் போது, கோவில் கட்டுவதும், கல்லுத் தலையில் அரும் பண்டங்களைக் கொட்டி வீணாக்குவதும் உற்சவம் நடத்துவதும், செம்பு பித்தளை உருவங்களை, மதப் பிரதிநிதிகளைப் பல்லக்கில் வைத்துப் பிணத்தைச் சுமப்பதுபோல் சுமந்து திரிவதும் அறிவுடைய கூட்டம் செய்யக் கூடிய காரியமா?


சூப்பர் பவர் பற்றி பேசும் மேல் தட்டு மக்களே! ! !

ஒரு சராசரி மனிதனின் தேவைகள் கூட கிடைக்காத இந்நாட்டில் சூப்பர் பவர் பற்றி பேசும் மேல் தட்டு மக்களே! ! ! கொஞ்சம் கடைநிலை மனிதனை நினைத்து பாருங்கள்