அறிஞர் அண்ணா :
"மாதமோ சித்திரை,
மணியோ பத்தரை,உங்கள்
தழுவுவதோ நித்திரை..
மறக்காமல் இடுங்கள்
எங்களுக்கு முத்திரை.."
இந்த எதுகை மோனை அந்த பொதுக்கூட்ட தாமத்தையும் மறக்கடித்து மக்களையும் கிரங்கடித்தது... தமிழ் நாட்டின் பெர்னாட் ஷா என வர்ணிக்கப்பட்ட அண்ணாவின் தமிழ் பேச்சில் மயங்காதார் யாரும் இல்லை..
கலைஞர் கருணாநிதி : எம்ஜியார் முதலைமைச்சராக இருந்த பொழுது சட்டசபை விவாதத்தில் கூச்சல் எழுந்தவுடன் "உங்களை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்" என்று எம்ஜியார் சொன்ன மறு நிமிடம் எதிர்கட்சி தலைவராய் இருந்த கலைஞர் எழுந்து.."இதற்கு முன் தமிழ் நாட்டை "ஆண்டவன்" என்று என்னை சொல்வாதல்.. நான் இருக்கிறேன் காப்பாற்ற" என்று கூறியதை கேட்டு மொத்த சபையும் ரசித்தது..
இப்படி சிலேடை பேச்சானாலும் சரி,இலக்கியமானாலும் சரி தமிழ் தங்குதடையில்லாமல் தங்கிய இடம் கலைஞரின் நாக்கு.. இன்றுவரை மேடைப்பேச்சில் கோலேட்சும் இவரின் அன்றைய தமிழ் மேடைப் பேச்சு இளைஞர்களின் மூச்சாகவே இருந்தது..இவரின் பேச்சால் திமுக விலும் இவரின் தமிழ் வசனம் கேட்டு திரைத்துறைக்கும் வந்தவர்கள் ஏராளம்..............
No comments:
Post a Comment