Tuesday, June 16, 2009

metro rail now in chennai




அதிகரித்து வரும் சென்னை நகர ஜனத்தொகை. பெருகிவரும் வாகன நெரிசல். இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு. பத்து கிலோ மீட்டர் பயணம் செய்ய ஒரு மணி நேரம் தேவைப்படுகிற போக்குவரத்து நெரிசல். இப்படி பல்வேறு விசயங்களால் அல்லல் படும் பெரு நகரங்களில் ஒன்றான சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த அரசு அனுமதி தந்திருப்பது ஆறுதலான விசயம்.

வளர்ந்து வரும் நகரங்களுக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து வசதி என்பது மிகவும் அவசியமான ஒன்று. இப்பொழுது சென்னையின் மக்கள் தொகை சுமார் 90 லட்சம். வாகனங்களின் எண்ணிக்கை 40 லட்சதை தாண்டிவிட்டது.

மெட்ரோ திட்டம் ரு. 14,600 கோடி செலவில் செயல்படவுள்ளது. ஐ.நா சபையின் பாராட்டுகள் பெற்ற டெல்லி மெட்ரோ ரயில் திட்ட நிர்வாகிகள் இதற்கான திட்ட அறிக்கையை தயாரித்துள்ளனர். இத்திட்டத்திற்கான முதலாவது வழித்தடம் திருவொற்றியூரில் தொடங்கி அண்ணா சாலை வழியாக விமான நிலையம் வரை செல்லும். 2004 ஆம் ஆண்டு திட்டம் முடைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Image

6 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் சுமார் 1500 பேர் பயணம் செய்யலாம். அதாவது 16 பேருந்துகள், 300 கார்கள், 700 டூவீலர்கள் சாலைகளிலிருந்து நீக்கப்படும்.

Image

இத்தனை வசதிகளை கொண்ட மெட்ரோ திட்டம், சென்னை நகர பிற பிரச்சனைகளை பார்க்க வேண்டும் என்கிறது ஒரு அமைப்பு. அதாவது, இதற்கு தேவையான இடம் சென்னை நகர கூவம் பக்கத்திலிருந்து எடுக்கப்படவுள்ளது. ஆகையால் அங்கு வசித்து வரும் மக்களுக்கு தகுந்த இருப்பிடங்கள் ஏற்பாடு செய்துதர வேண்டும். மேலும் சுரங்க பாதை அமைக்கும் பணியால் சென்னை நகரை நில நடுக்கம் தாக்க வாய்ப்புள்ளதாவும் தெரிவிக்கிறது ஒரு அமைப்பு. மேலும் கடலோரம் சார்ந்த பகுதிகளில் சுரங்க பாதையில் நீர் கசிய வாய்புள்ளதாக எச்சரித்துள்ளது.

இப்படிப்பட்ட அருமையான, சென்னைக்கு மிகவும் தேவையான இந்த திட்டம் எந்த சுகாதார சீர்கேடுகளுக்கு ஆளாகாமல் செயல்பட வேண்டும் என்பதே தமிழக மக்களின் கோரிக்கையும், கனவும் ஆகும்.

Image










No comments: